பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா
விழுப்புரம்: விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன் வரவேற்றார். விளையட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சென்னை அண்ணா பல்கலை கழக மாணவர் குழு இயக்குநர் இளையபெருமாள் பரிசுகள் வழங்கினார். இதில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.