உள்ளூர் செய்திகள்

ஓவியம் மற்றும் அனிமேஷன் பயிற்சி

மதுரை: தினமலர் நாளிதழ், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி சார்பில், ஓவியம் மற்றும் அனிமேஷன் பயிற்சி துவங்கியது. கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார். டில்லியைச் சேர்ந்த ஓவியர் சிவபாலன் பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமின் அவசியம், அனிமேஷன்துறை மாணவர்களுக்கு உலகளாவிய வேலை வாய்ப்புகள் பற்றி, அனிமேஷன் துறைத் தலைவர் திருநாவுக்கரசு பேசினார். முதல்வர் ராம்நாத், பேராசிரியர்கள் செந்தில்குமார், நவீந்திரகுமார், ஆரோக்கிய அன்பு ஜார்ஜ், புருஷோத்தமன் பங்கேற்றனர். இன்று (ஏப்.,௧௭) பயிற்சி நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்