உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

மூங்கில்துறைப்பட்டில் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் வழிப்புணர்வு பேரணி நடத்தினர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த வாழவச்சனுாரில் உள்ள வேளாண்மை கல்லுாரியில் உள்ள என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ஆராய்சி மாணவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கல்லுாரியின் முதல்வர் டாக்டர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் டாக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் முகமதுஅலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழவச்சனுாரில் துவங்கிய பேரணி, மூங்கில்துறைபட்டு நான்கு முனை சந்திப்பு வரை சென்றடைந்தது. மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்று விழிப்புணர்வு கோஷமிட்டவாறு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்