பள்ளி மேலாண் குழு பயிற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி சார்பில் அலைகாத்தான்வலசை, லட்சுமிபுரம் கிராமங்களில் பள்ளி மேலாண் குழு பயிற்சி நடந்தது. தொண்டு நிறுவன இயக்குனர் சாத்தையா தலைமை வகித்தார். அலைகாத்தான்வலசை கிராம தலைவர் கருப்பையா முன்னிலை வகித்தார். இருமேனி ஊராட்சி தலைவர் சேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மதுரை சமம் குடிமக்கள் இயக்க தலைவர் ராஜன் பயிற்சி நடத்தினார். ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி, பணியாளர்கள் ராஜாத்தி, பாக்யலட்சுமி, ஆரோக்கியராஜ் மற்றும் பனைத்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.