அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சூழல் விருது
மதுரை: மதுரையில் மரம் வளர்ப்பு, பசுமை வளாகம், மூலிகை தோட்டங்கள் அமைப்பு உட்பட சிறப்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக எல்.கே.பி.,நகர் மற்றும் சிட்டம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட்டன. இதற்காக அப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளிகளுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.