தன்னம்பிக்கை அளிக்கும் ஸ்டெப்ஸ் அகாடமி!
புதுச்சேரி: ஸ்டெப்ஸ் அகாடமியின் பவர் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பு தன்னம்பிக்கை கொடுத்துள்ளது என, பயிற்சி முடித்தவர்கள் தெரிவித்தனர். புதுச்சேரி ஸ்டெப்ஸ் அகாடமியில், அனைத்து தரப்பினரும் எளிதாக ஆங்கிலம் கற்கும் வகையில், பவர் இங்கிலீஷ் பயிற்சி வகுப்புகள் செயல்முறை வடிவில் நடத்தப்பட்டு வருவதால், பல்வேறு தப்பினரும் ஆர்வமுடன் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர். ஸ்டெப்ஸ் அகாடமியில் பவர் இங்கிலீஷ் பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. பயிற்சி முடித்தோர், ஸ்டெப்ஸ் அகாடமி நிர்வாகி செந்தில்வேலனுக்கு, சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினர். பயிற்சி பெற்றவர்கள் கூறியதாவது: ஆயிஷா, கள்ளக்குறிச்சி: பட்டம் படித்து இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசுவதில் தயக்கம் இருந்தது. பயிற்சி வகுப்பில் சேரும்போது ஆங்கிலத்தில் பேச முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. முதல் வகுப்பு நடத்தும்போதே, தன்னம்பிக்கை வந்து விட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு முறையும் கள்ளக்குறிச்சியில் இருந்து புதுச்சேரிக்கு தனியாக வந்து செல்லும் தைரியமும் இந்த பயிற்சி வகுப்பு மூலம் கிடைத்துள்ளது. காயத்ரி, பட்டதாரி, புதுச்சேரி: பள்ளி முதல் கல்லுாரி வரை தமிழில் பாடங்களை படித்ததால், ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. ஸ்டெப்ஸ் அகாடமியில் ஆங்கில உச்சரிப்புகள் பிராக்டிகலாக சொல்லி கொடுத்தது, எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஸ்டெப்ஸ் அகாடமி நிர்வாகி செந்தில்வேலன் கூறும்போது &'அடுத்த பயிற்சி வகுப்பு, மே மாதம் 22ம் தேதி துவங்குகிறது. வயது வித்தியாசமின்றி பள்ளி மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இதுவரை 1,120 பவர் இங்கிலீஷ் வகுப்பு பயிற்சி முடித்துள்ளனர். இப்பயிற்சியில் சேர, எண்.31, நீடராஜப்பையர் வீதி, காந்தி வீதி சந்திப்பு, அமுதசுரபி அருகில், புதுச்சேரி-1 என்ற முகவரியிலோ, 98949-19412 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்&' என்றார்.