உள்ளூர் செய்திகள்

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது

நாடு முழுவதும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 13 ஆயிரத்து 814 பேர் எழுதியுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 22 வரை நடைபெற்றது. இதன், தேர்வு முடிவுகள் இன்று (மே 21) வெளியானது. தேர்ச்சி விகிதம்: இந்த ஆண்டு 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் 94 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 92 சதவீதம் மாணவர்கள் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இணையதளங்கள்: www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் லாக்கர் இந்த ஆண்டு, முதல் முறையாக, சி.பி.எஸ்.இ., டிஜிட்டல் மார்க் சான்றிதழ்களை, டிஜிட்டல் லாக்கர் மூலம் www.digilocker.gov.in என்ற இணையதளத்தில் வழங்குகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்