ஓட்டை உடைசல் வகுப்பறைகள் ஆய்வு
மதுரை: மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் பயன்படுத்தாமல் மோசமான நிலையிலுள்ள வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. கோடை விடுமுறை துவங்கி ஜூன் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், பள்ளி துவங்கும் நாளில் ஆசிரியர்கள் அரைமணி நேரத்திற்கு முன்பாக பள்ளியில் இருக்க வேண்டும். பராமரிப்பில்லாத வகுப்பறைகள் இருந்தால் அவை கண்டறியப்பட்டு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட அரசு பள்ளிகளில் மோசமான நிலையிலுள்ள வகுப்பறைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.