முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி; பிரேமசுதா
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்ஆர்வி எக்செல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி பிரேமசுதா 499 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் கூறுகையில்: மாநில அளவில், முதல் இடத்தை பிடித்து மகிழ்ச்சியாக உள்ளது. 490 மதிப்பெண்கள் மட்டுமே எதிர்பார்த்தேன், ஆனால் 9 மதிப்பெண் அதிகம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளேன். எனது வகுப்பு ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் நன்றி. ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தும் பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுவேன். கடினமாக படித்ததுக்கு பலன் கிடைத்துள்ளது என்றார்.