உள்ளூர் செய்திகள்

மருத்துவராவது என் கனவு; ஆகாஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர் கூறுகையில்: ஆசிரியர்கள், வகுப்பில் நடத்தும் பாடங்களை அன்றே படித்து முடித்து விடுவேன். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர்களின் உதவியுடன் அதை தெளிவு படுத்திக் கொள்வேன். பள்ளி நிர்வாகமும், வகுப்பு ஆசிரியர்களும் மற்றும் எனது பெற்றோரும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியதால் மாநில அளவில் 2ம் இடம் பிடிக்க முடிந்தது. பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்து, மருத்துவர் ஆக வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்