நாளை ’டான்செட்’ நுழைவு தேர்வு
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20 இடங்களில்நடக்கிறது. எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, &'டான்செட்&' என்ற தமிழக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, நாளை துவங்குகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, நாளையும்; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு நாளை மறுநாளும் தேர்வு நடக்கிறது. இதில், எம்.பி.ஏ.,வுக்கு, 14 ஆயிரத்து, 568 பேர்; எம்.சி.ஏ., படிப்புக்கு, 6,323 பேர்; எம்.இ., - எம்.டெக்., படிக்க, 17 ஆயிரத்து, 47 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.