ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு
சென்னையில் அவர் கூறியதாவது: தமிழ் தகவல் தொழில் நுட்பத்திற்கான உத்தமம் அமைப்பு, ஜெர்மன் கோலொன் பல்கலைக் கழகத்தின் இந்திய இயல் மற்றும் தமிழ் ஆய்வு மையம் சார்பாக, தமிழ் இணைய மாநாடு அக்டோபர் 23 முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் நடக்கிறது. கணினி வழி காண்போம் தமிழ் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இம் மாநாடு நடக்கிறது. பல்வேறு நாடுகளின் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஐரோப்பாவில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள தமிழர்களில் குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் ஐரோப்பிய மொழியில் கணினியை பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவரும், தமிழில் கணினியை பயன்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். பொதுவான கொள்கையுடன், கணினி வழி தமிழை ஒரே சீரான குறியீட்டில் உருவாக்கி, உலகளவிலும் தமிழ் சார்ந்த நாடுகளிடம் அறிமுகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்துவோம். மாநாட்டிற்கான கட்டுரையை, செப்டம்பர் 15ம் தேதிக்குள் இமெயில் செய்யலாம். வல்லுனர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள், மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரையாளர்களுக்கு, ஜெர்மன் செல்ல விசா, தங்குமிடவசதி இலவசமாக செய்து தரப்படும். வரும் 2010ம் ஆண்டில் தமிழ் இணைய மாநாட்டை தமிழகத்தில் நடத்த, முதல்வர் கருணாநிதியுடன் கலந்து பேசி முடிவு செய்வோம்.