உள்ளூர் செய்திகள்

வேதியியல் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு பதக்கம்

மும்பை: பிரிட்டனில் நடந்த வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜூலை 18 மற்றும் 27ம் தேதிகளில் சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில், 68 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த விநாயக் காக்ரனி, சுருதி  காத்ரி, ஐதராபாத்தைச் சேர்ந்த மணிகண்டா கொட்டாரு, மும்பையைச் சேர்ந்த அபிஷேக் பத்மநாபன் ஆகியோர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர். புனேயில் உள்ள இந்திய அறிவியல் மைய பேராசிரியர் ஏ.ஏ.நாது, பெங்களூரு தேசியக் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், ஹோமி பாபா மைய ஆலோசகர் சவீதா உள்ளிட்டோர் மாணவர்களுடன் லண்டன் சென்று வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்