அரசு ஐ.டி.ஐ.,களில் கட்டடங்கள் திறப்பு
சென்னை; தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, 15.86 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.ஆலத்துார் மற்றும் சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,க்களுக்கு, புதிய கட்டடங்கள், பயிற்சியாளர் விடுதி கட்டடங்கள் கட்டப்பட்டன.தாராபுரம், திருப்பூர், முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ.,க்களில், புதிய தொழிற்பிரிவுகளுக்கான கட்டடங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய கட்டடம், 15.86 கோடி ரூபாயில் கட்டப்பட்டன. இவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.தமிழகத்தில் உள்ள, 53 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மோட்டார் வாகன மெக்கானிக் தொழிற்பயிற்சி படிப்போருக்கு, மின்சார வாகனங்களை இயக்கவும், பழுது நீக்கவும், பயிற்சி அளிக்க, 5.98 கோடி ரூபாயில், 53 மின்சார வாகனங்கள் வழங்கும் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார்.வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் வடிவமைக்கப்பட்ட, &'தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்&' வழியே, தனியார் துறை நிறுவனங்களில், 238 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஆறு பேருக்கு, இணையம் வழியே, பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, நிலோபர் கபில் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.