ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை
ஆண்டிபட்டி; &'ஆன்லைன்&' வகுப்பு பாடங்கள் புரியாததால், 10ம் வகுப்பு மாணவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர், பாண்டி. கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அபிஷேக், 15; கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவருக்கு, ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் நடத்தப்பட்டன. &'பாடங்கள் புரியவில்லை&' என தந்தையிடம் கூறினார். நன்றாக படிக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.நேற்று முன்தினம் இரவு, சாப்பிடாமல் அபிஷேக் துாங்க சென்றார். நேற்று அதிகாலை, அவருக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டது. விசாரித்தபோது, விஷம் குடித்தது தெரிந்தது. தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.