உள்ளூர் செய்திகள்

சி.ஏ., தேர்வு தள்ளி வைப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக, நேற்றும், இன்றும் நடக்கவிருந்த, சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை, கடலுார், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில், நவ., 24, 25 தேதிகளில் நடக்க திட்டமிடப்பட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள், டிச., 9, 11ம் தேதிகளில் நடத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்