உள்ளூர் செய்திகள்

துவங்கியது நோபல் பரிசளிப்பு விழா

ஸ்டாக்ஹோம்: கொரோனா பிரச்னை காரணமாக, நோபல் பரிசு வழங்கும் விழா, இந்தாண்டு மிக எளிமையாக துவங்கியுள்ளது.ஐரோப்பிய நாடான, சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல். இவர் நினைவாக, மருத்துவம், பொருளாதாரம், ரசாயனம் உள்ளிட்ட, 12 துறைகளில் சாதனை படைத்தவர் களுக்கு, சுவீடன் தலைநகர், ஸ்டாக்ஹோமில், ஆண்டுதோறும், டிச., 10ல் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அமைதிக்கான நோபல் பரிசு விழா மட்டும், அண்டை நாடான நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும்.இந்தாண்டு அக்டோபரில், நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட சாதனையாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தாண்டு கொரோனா பிரச்னை காரணமாக, அந்தந்த நாடுகளில் உள்ள சாதனையாளர்களுக்கு, தனித்தனியாக நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது.ஒரு வாரம் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியில், முதலாவதாக நேற்று, ரசாயனத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.பிரான்சின் இமானுவேல் சார்பென்டெர், அமெரிக்காவின் ஜெனிபர் தவுத்னா ஆகியோர், இப்பரிசை பகிர்ந்து கொண்டனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில், சுவீடன் துாதரகத்தில் நடந்த எளிய விழாவில், இமானுவேல் சார்பென்டருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதுபோல, வாஷிங்டனில் உள்ள சுவீடன் துாதர், ஜெனிபர் தவுத்னாவுக்கு, நோபல் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்