நீட் தேர்வு இலவச பயிற்சி
தேனி: தேனி பழனிச்செட்டி பட்டியில் இயங்கும் அல்மைட் அகாடமியில் 2021 மே -ல் நடக்க உள்ள &'நீட்&' தேர்வில், மாவட்ட அரசுப்பள்ளிகளில் பயின்று கடந்தாண்டு &'நீட்&' தேர்வு எழுதி வாய்ப்புக்கிட்டாதவர்கள், இந்தாண்டு பிளஸ் 2 பயிலும் ஏழை மாணவர்களில் 30 பேர் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கான &'நீட்&'பயிற்சிகள் முதல் தேர்வுகள் வரை ஆகும் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 63803 22347 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அல்மைட் அகாடமி நிர்வாகி ராஜன் தெரிவித்தார்.