உள்ளூர் செய்திகள்

பெங்களூரு பல்கலையில் ஆன்லைன் வகுப்பு

பெங்களூரு; பெங்களூரில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், தேர்வுகளை காலவரையின்றி தள்ளி வைத்துள்ள, பெங்களூரு பல்கலைக்கழகம், அடுத்த செமஸ்டருக்கு ஆன்லைனில் வகுப்புகளை துவக்க, தயாராகி வருகிறது.பெங்களூரு பல்கலைக்கழக துணைவேந்தர் வேணுகோபால், நேற்று கூறியதாவது:பெங்களூரில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், தேர்வுகளை காலவரையின்றி, பெங்களூரு பல்கலைக்கழகம், தள்ளி வைத்துள்ளது.முதலாவது செமஸ்டர் வகுப்புகளை, ஆன்லைனில் நடத்தும்படி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. தற்போது, நான்காம் செமஸ்டர் வகுப்பு மாணவர்களுக்கும், ஆன்லைனில் வகுப்புகளை துவக்கும்படி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், மாநில அரசு, பொது முடக்கம் அறிவித்துள்ளதால், பெங்களூரு பல்கலைக்கழகத்தின், பேராசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற, அனுமதியளித்துள்ளது.ஏப்., 28 முதல், மே, 11 வரை, பல்கலைக்கழகத்தின், சுகாதாரப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, பொறியியல் பிரிவை தவிர, மற்ற பிரிவினர் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.அவசர நேரத்தில், ஊழியர்களை தொடர்பு கொள்ள வசதியாக, அவர்களின் தொலைபேசி எண்களை, உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.பல்கலைக்கழக ஊழியர்களின் பணி, தேவைப்படும் போது, சம்பந்தப்பட்ட பிரிவு, அலுவலகத்தின் முக்கியஸ்தர்கள் விரும்பினால், அவர்கள் குறிப்பிடும் அதிகாரிகள், பேராசிரியர், ஊழியர்கள் எந்த காரணமும் கூறாமல், கட்டாயமாக பணிக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்