கொரோனா சிகிச்சைக்கு விஜயகாந்த் கல்லுாரி?
சென்னை: கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு, தன் கல்லுாரியை பயன்படுத்த, அரசுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அனுமதி வழங்கிஉள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சொந்தமான, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லுாரி, செங்கல்பட்டில் உள்ளது. இந்த கல்லுாரியை, கொரோனா சிகிச்சைக்கும், தொற்றால் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யவும் பயன்படுத்த, கடந்தாண்டு, விஜயகாந்த் அனுமதி வழங்கினார். தேவை ஏற்படாததால், கல்லுாரியை பயன்படுத்த வில்லை. தற்போது, கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ளது. எனவே, தனிமைப்படுத்தும் மையங்களை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, தன் கல்லுாரியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த, விஜயகாந்த் மீண்டும் அனுமதி வழங்கி உள்ளார்.