இந்தாண்டு நீட் தேர்வு உண்டு
நேற்று அவர் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பி.எஸ்., சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் மாணவர்களுக்காக கவலைப்பட்டு பேசுகிறாரா அல்லது ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிக்கை விட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.அறிவிப்புஅரசு பள்ளிகளில் &'நீட்&' தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது, மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் குழப்பம் ஏற்படுவதாக அவர் அறிவித்துள்ளார். நீட் தேர்வு வந்ததே, ஓ.பி.எஸ்., துணை முதல்வராக இருந்தபோது தான். அ.தி.மு.க., ஆட்சியின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான், அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தற்போது வரை செயல்பட்டு கொண்டிருக்கிறது.எனவே, குழப்பம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் தான், நீட் தேர்வு வந்தது; அதற்கான பயிற்சி வகுப்பும் துவங்கப்பட்டது. தற்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.கோரிக்கைஇந்நிலையில் தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார். 2010 டிச., 27ல் தான் மத்திய அரசு, மருத்துவம் மற்றும் அதற்கான மேற்படிப்பில் நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்தது.கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, மருத்துவ படிப்பில் சேருவதற்கு, தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவு தேர்வை பரிசீலிக்குமாறு, மத்திய அரசு தமிழகத்தை கேட்டுக் கொண்டது.அதன்பின், ஜன., 6ம் தேதி கருணாநிதியால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நுழைவு தேர்வுக்கு தடை பெறப்பட்டது. பின், 2017ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், &'மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்&' என, இரண்டு தீர்மானங்கள் சட்டசபையில் கொண்டு வரப்பட்டன.இந்த தீர்மானங்கள், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன; அவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தார். அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இந்த நிமிடம் வரை, நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழல் தான் இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் முடிவு. எனவே, நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை வந்த பின், இதற்கான நடவடிக்கை தொடரும். கொரோனா இறப்புகளை மறைப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. கொரோனா 3வது அலை வரவே கூடாது. ஏற்கனவே, முதல், 2வது அலையில் மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும். எனினும் 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயராக உள்ளது. அதேபோல, குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 2,131 பேர், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கான சிகிச்சை அளிக்க கூடிய &'ஆம்போடெரிசின் - பி&' மருந்து, 10 ஆயிரம் அளவில் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.