பள்ளிகளை திறக்க அரசுக்கு ஆலோசனை
பெங்களூரு: &'&'கொரோனாவால் மூடப்பட்ட பள்ளி, கல்லுாரிகளை திறக்க வேண்டும்,&'&' என கல்வி மேம்பாட்டு ஆலோசகர் துரைசாமி, கர்நாடக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் எடியூரப்பாவுக்கு, துரைசாமி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:மாநிலத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இன்னும் சில நாட்களில், தடுப்பூசி போடும் பணிகள் முடிவடையும். பாதுகாப்பான நடவடிக்கைகளுடன், ஆகஸ்ட் 9 லிருந்து, கல்லுாரிகளை துவங்கலாம். பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவு, ஜூலை இரண்டாம் வாரம் வெளியாகிறது. அதன்பின் மாணவர் சேர்க்கைக்கு, குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று வாரங்கள், கால அவகாசம் அளித்து, பட்டப்படிப்பு கல்லுாரிகளை துவங்குவது நல்லது. தேவிஷெட்டி தலைமையிலான செயற்படை, பள்ளிகளை துவங்குவது தொடர்பாக, செய்துள்ள சிபாரிசுகளின்படி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பள்ளிகளை துவங்கலாம். மாநிலம் முழுவதும், பள்ளிகளை துவங்குவதற்கு பதில், மாவட்ட வாரியாக, பள்ளிகளை திறப்பது பற்றி, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுக்க, அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.