மாவட்டம் தோறும் சட்டக் கல்லுாரி
சென்னை: ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு சட்டக் கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:கடந்த ஆட்சியில், 16 தனியார் சட்டக் கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லுாரி இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். &'நீட்&' தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். தேர்வுக்கு விலக்கு பெற அரசு முயற்சிக்கும்.நீண்ட நாள் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து, அமைச்சரவை கூடி, கொள்கை முடிவு எடுத்து தான் முடிவு செய்ய முடியும்.சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அரசு சார்ந்த வழக்குகளை கணினிமயமாக்கி, அனைவரும் அறிந்து கொள்ள, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை, முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.