எர்த் சயின்ஸ் ஒலிம்பியாட் போட்டி
ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா இந்த நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தோனேஷியாவில் நடைபெறும் நான்காவது சர்வதேச எர்த் சயின்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். 1992ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியிலிருந்து 1995ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரை பிறந்த பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு படித்த மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுதலாம். ஏற்கெனவே, இத்தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் பங்கேற்க முடியாது. சென்னை, டில்லி, கோல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், மங்களூர், தார்வாத், கோவா, சண்டீகர், புனே, அகமதாபாத், லக்னோ, வாரணசி, புவனேஸ்வரம், ஹிசார், ஷில்லாங் ஆகிய நகரங்களில் ஜனவரி 24ம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெங்களூரில் உள்ள ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் வெளிநாட்டுச செயலாளர் ஆர். சங்கருடன் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 0824-2284465, 9916823885