தலைமை ஆசிரியர்களுடன் சி.இ.ஓ., ஆலோசனை
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் அறிமுகம் செய்ய பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரிப்பதால் தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் சி.இ.ஓ., குப்புசாமி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் அறிமுகப்படுத்துவது குறித் தும், திட்டத்தை செயல்படுத்துவது, பள்ளி விபரங்கள், மாணவர்கள், வகுப்பறை, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வி தரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் வரும் 14 ம் தேதி துவங்கி 23 ம் தேதி வரை நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது. முழு ஆண்டு தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்துதல், சோர்வடையும் மாணவர்களை ஊக்கப்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்துவது. ஆசிரியர்களின் கற்பிக்கும் முறையை அதிகப்படுத்த தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில் 243 அரசு பள்ளிகள், 47 நிதியுதவி பள்ளிகள், 85 மெட்ரிக் பள்ளிகள், 11 ஆதிதிராவிடர் பள்ளிகள், 19 சுய நிதி பள்ளிகள் உட்பட 405 பள்ளிகளில் இருந்து தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) பாவாணன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சேகரன், பள்ளி கல்வி துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், அலுவலர்கள் கோகுல், இளமாறன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.