உள்ளூர் செய்திகள்

விடா முயற்சி இருந்தால் சாதிக்கலாம்!

காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் சலீம்பாட்ஷா. இவரது மனைவி ராணி (48). எம்.ஏ., தமிழ் இலக்கியம் முடித்து, அழகு கலையிலும் டிப்ளமோ பெற்றுள்ளார். ஆஷா அழகுக்கலை தொழில் பயிற்சி பள்ளி (ஐ.டி.ஐ.,) துவக்கி முதல்வராக செயல்படுகிறார்.அவர் கூறியதாவது:திருமணத்திற்கு பின் ஏதாவது தொழில் துவங்க வேண்டும் என முடிவு செய்தேன். ஏற்கனவே அழகு கலை படித்ததால் அத்துறையில் சாதிக்கலாம் என நம்பிக்கை பிறந்தது. கணவர் ஒத்துழைப்புடன் 1996 முதல் 2006 வரை பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்தினேன். அவ்வப்போது தொழிலில் பின்னடைவு ஏற்பட்டாலும், மனம் தளராமல் போராடி வெற்றி கண்டேன்.விடா முயற்சியால் அழகு கலை நிலையம், கடந்த ஆண்டு அழகு கலை தொழில் பயிற்சி பள்ளியாக (ஐ.டி.ஐ.,) தரம் உயர்த்தப்பட்டது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனமாக செயல்படுகிறது. இப்பள்ளி மூலம் மூன்று மாதத்திற்கு 20 பேர் வீதம் பயிற்சி பெறுகின்றனர். அழகுகலையில் அடிப்படை தெரிந்தாலே போதும் தொழில் துவங்கலாம். இப்பள்ளி மூலம் சான்று பெற்றவர்களுக்கு எளிதில் வெளிநாடு செல்ல "விசா&' கிடைக்கிறது.இதனால் இங்கு கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.இங்கு படித்த பலர் வெளிநாடுகளிலும் அழகு கலை நிலையம் நடத்துகின்றனர். ஆண்களின் வருமானத்தை நம்பி வாழ்வதை தவிர்த்து, பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும். எந்த தொழில் செய்தாலும், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் சாதிக்க முடியும். தொழிலில் ஏற்படும் அவமானத்தை சாதனையாக மாற்ற பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.இவரை 94431 11289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்