உள்ளூர் செய்திகள்

காவலர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு!

தமிழக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:   தமிழக காவல் துறையில், 4,000 இரண்டாம் நிலை காவலர்கள் (ஆண், பெண்) தேர்வுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த மாவட்ட தலைமையகங்களில், வரும் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்த்தல், உடல் கூறு அளத்தல், திறனறித் தேர்வு ஆகியவை நடக்கின்றன. இந்த உடல் திறன் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், அவர்கள் சார்ந்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை, தங்களது சான்றிதழ்களுடன், 10ம் தேதி காலை 6 மணிக்கு சந்தித்து, தங்களது சேர்க்கையினை தெரிவித்து, தேர்வில் கலந்து கொள்ளலாம். தமிழக சீருடை பணியாளர் தேர்வுக் குழும இணையதளத்தை பார்த்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்