மருத்துவ கல்வியில் மாற்றம் தேவை
சென்னை நியூ ஹோப் சிறப்பு மருத்துவமனையின் 3ம் ஆண்டு விழாவை யொட்டி நடந்த பாராட்டு விழாவில், டாக்டர் ஆனந்த் வரவேற்றார். டாக்டர் கோதண்டராமன் ஆண் டறிக்கை வாசித்தார். டாக்டர் மெரிபால் பாலசிங், துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜனை பாராட்டி கவிதை வாசித்தார். டாக்டர்கள் சி.என்.கே.ரெட்டி, பாலசுப்பிரமணியன், செல்லப் பன் மற்றும் மருத்துவத் துறை பேராசிரியர் சொக்க லிங்கம் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு தரப் பினரும் துணைவேந்தருக்கு மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். விழாவில், துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசியதாவது:மருத்துவக் கல்வியில் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அடுத்தடுத்து கொண்டு வர வேண்டும்.மருத்துவக்கல்வியை மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகளை வரவேற்கிறேன். இத்துறை யில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.இவ்வாறு மயில்வாகனன் நடராஜன் பேசினார்.