உள்ளூர் செய்திகள்

துாய்மை பணியாளருக்கு பாராட்டு விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் கூடலுார் நகராட்சி புதுப்புதுாரில் துாய்மை பணியாளராக கடந்த 40 ஆண்டுகளாக நஞ்சம்மாள் பணியாற்றி வந்தார். எவ்வித புகார் இல்லாமல் பணியாற்றி வந்த அவருக்கு பணி நிறைவு நாளில் ஊர் பொதுமக்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தினர்.மேலும் கூடலுார் நகராட்சி தலைவர் அறிவரசு, நஞ்சம்மாளின் பணியை போற்றும் வகையில் தன்னுடைய அலுவலக இருக்கையில் அமர வைத்து பெருமைப்படுத்தினார். பின்னர் மாலையில் கூடலுார் நகராட்சி அலுவலக வாகனத்தில் அழைத்துச் சென்று, நஞ்சம்மாள் அவரது வீட்டில் இறக்கி விடப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்