வெளிநாட்டில் வேலை: விண்ணப்பிக்க அழைப்பு
பொள்ளாச்சி: சவுதி அரேபிய அமைச்சகத்தில், பெர்பியூசினிஸ்ட்ஸ் ஆக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.சவுதி அரேபிய அமைச்சகத்தின், அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம் உள்ள, தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பெர்பியூசினிஸ்ட்ஸ் தேவைப்படுகின்றனர். உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை, அந்நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.இந்நிறுவனம் வாயிலாக அளிக்கப்படும் விவரங்கள், வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விபரங்களை, www.omcmanpower.com- என்ற வலைதளத்தை பார்வையிடலாம்.ஊதியம் மற்றும் பணி விபரங்கள் பற்றிய தகவல்களுக்கு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை, 95662 39685, 63791 79200, 044 - 2250 5886, 2250 2267 என்ற எண்களில் அறியலாம். ovemcImohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக, விண்ணப்பம் அனுப்பலாம்.இந்நிறுவனத்துக்கு, இடைத்தரகரோ அல்லது ஏஜன்ட்டுகளோ இங்கு இல்லை. விண்ணப்பத்தாரர்கள், நேரிடையாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு மற்றும் பணி விபரங்களின் தகுதியைப் பொறுத்து, முன்னுரிமை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம், சேவைக் கட்டணமாக 35,400 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும்.இத்தகவலை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் கலையரசி தெரிவித்துள்ளதாக, கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.