சுகாதார துறை பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மருத்துவ பணியாளர் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:மாநிலம் முழுதும், 1,066 சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம், 15,500 முதல், 62,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணிகளில் சேர, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள், பத்தாம் வகுப்பில் தமிழ்மொழி பாடம், பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கொண்ட, ஹெல்த் ஒர்க்கர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை படித்து, பொது சுகாதாரத்துறையிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, மொபைல் போன் எண், மின்னஞ்சல் முகவரியை கட்டாயம் அளிக்க வேண்டும். தேர்வு தொடர்பாக அனைத்து தகவல்களும், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும். மேலும் விபரங்களுக்கு, வாரியத்தின் இணையதளம் மற்றும் சந்தேகங்கள் இருந்தால், 98405 86582 என்ற எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரையில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.