உள்ளூர் செய்திகள்

ஜப்பான் நிறுவனத்துடன் எஸ்.ஆர்.எம்., ஒப்பந்தம்

சென்னை: ஜப்பானின் காக்னவி நிறுவனத்துடன் எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.ஜப்பானின், காக்னவி நிறுவனம், சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாக செயல்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், இதில் பயிற்சி பெற்ற இன்ஜினியர்களை உருவாக்கும் அமைப்பாக விளங்குகிறது. இந்நிறுவனத்துடன், எஸ்.ஆர்.எம்., குளோபல் கன்சல்டிங் நிறுவனம் இணைந்து, சர்வதேச வேலைவாய்ப்புக்கான புதிய டிஜிட்டல் ஆன்லைன் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில், எஸ்.ஆர்.எம். குளோபல் கன்சல்டிங் நிறுவன தலைவரும், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் இணைவேந்தருமான சத்தியநாராயணன் மற்றும் காக்னவி இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குனர் மிட்சுடக செகினோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி, சர்வதேச நிறுவனங்களுக்கு ஏற்ற ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை திட்டங்களை உருவாக்குதல், வெளிநாட்டு பல்கலைகளுடன் உயர்கல்வி பரிவர்த்தனை மேற்கொள்ளுதல், ஜப்பானில் இந்திய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுதல் போன்றவை மேற்கொள்ளப்படும். எஸ்.ஆர்.எம்., நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்