உள்ளூர் செய்திகள்

கிண்டி ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

சென்னை: கிண்டியில் உள்ள அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.அரசின் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டியில் செயல்படுகிறது. இங்கு, பல்வேறு தொழில் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. பயிற்சியில் சேர விரும்பும் தகுதி உள்ள மாணவர்கள், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு, கட்டணமில்லா பயிற்சி, சீருடை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில், மத்திய அரசின் சான்றிதழுடன், வேலைவாய்ப்புக்கும் வழிவகை செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 2250 1350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்