உள்ளூர் செய்திகள்

சவுதியில் நர்ஸ் வேலை வேண்டுமா?

சென்னை: சவுதி அரேபியாவில் பணிபுரிய, பெண் செவிலியர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சவுதி அரேபிய அமைச்சகத்தின், அரசு மருத்துவமனையில் பணிபுரிய, குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவத்துடன், பி.எஸ்.சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். இப்பணிக்கான நேர்காணல், கேரள மாநிலம், கொச்சியில், ஆக., 7 முதல் 10 வரை நடக்க உள்ளது. தேர்வு செய்யப்படுவோருக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, அந்நாட்டின் வேலைஅளிப்பவரால் வழங்கப்படும்.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.omcmanpower.com என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 95662 39685, 63791 79200, 044 - 2250 5886, 2250 2267 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் என, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்