பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு
சோழவந்தான்: சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மாணவிகளின் வாசிப்புத் திறன், வகுப்பறைகளை ஆய்வு செய்தவர், பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாதது, கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறைகள் தேவை உள்ளது என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆசிரியர்கள் அமைச்சருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். எம்.எல்.ஏ., வெங்கடேசன், உதவித் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.