பள்ளி மாணவிகளுக்குநாப்கின் தயாரிப்பு பயிற்சி
எட்டாம் வகுப்பில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை பிரிவு, பெண் கல்வி திட்ட மாணவிகளுக்கு, சுயதொழில் திறனை மேம்படுத்தும் வகையில், ஜனவரி 20ல் நாப்கின் தயாரிப்பு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகத்திலுள்ள 900 வட்டார வள மையங்களிலும், 45 ஆயிரம் மாணவியருக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், 1,500 மாணவியர் பயிற்சி பெற உள்ளனர்.பயிற்சி செலவிற்காக, அரசு, மூன்று கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 950 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவியருக்கு பயிற்சி அளிப்பதற்காக, இன்று ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக, மாவட்டத்திற்கு, 60 ஆசிரியைகள் வீதம் பயிற்சி பெறுகின்றனர்.