உள்ளூர் செய்திகள்

ஆஸ்திரேலியாவை ஒதுக்கும் இந்திய மாணவர்கள்

இந்த எதிர்மறை விளைவுகளால் 2010ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிற்கு கல்வி பெறச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 21 சதவீதம் குறைத்திடும் என தற்போது கணிக்கப்படுகிறது. டூரிசம் போர்காஸ்டிங் கமிட்டி என்னும் சுற்றுலா மதிப்பீட்டுக் குழுவின் சமீபத்திய தகவல்களின் படி கடந்த ஆண்டு 35 சதவீதம்அதிகரித்த நமது மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 21சதவீதம் குறைந்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் தோராயமாக 70 லட்ச ரூபாயை இழக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த செய்திகள் வெளியாகும் முன்பே சமீபத்தில் ஒரு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டிருப்பது இன்னமும் பாதிப்பைஏற்படுத்துகிறது.  ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்திற்கு 2007ம் ஆண்டில் 1082 இந்திய மாணவர்கள் கல்விக்காக சென்றனர். ஆனால் 2008ல் இது 1447 ஆக உயர்ந்தது. இந்தப் பகுதி இந்திய மாணவர்கள் தான் இனவெறித் தாக்குதலில் அதிகம் இலக்கானவர்கள். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண ஆஸ்திரேலிய அரசு சிறப்பு செயல் குழு ஒன்றை நிறுவியுள்ளது. எனினும் இந்த முயற்சிகளும் தொடரும் வன்முறைகளும் இந்திய மாணவரை திருப்தியடையச் செய்யவில்லை. எனவே ஆஸ்திரேலிய கல்வி மீதான இந்திய மாணவர்களின் கண்கள் பிற பக்கம் திரும்பியிருக்கின்றன என்பதே உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்