உள்ளூர் செய்திகள்

நிலவின் மேற்பரப்பில் கந்தகம்: இஸ்ரோ

பிரக்யான் ரோவர் ஹைட்ரஜன் இருக்கிறதா என ஆய்வு செய்கிறது. மேலும் ரோவரில் உள்ள லேசர்-இண்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் எனும் கருவி தனிமங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது.இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை அளவீடுகள் மூலம் உறுதிப்படுத்தியது சந்திரயான் -3 ரோவரில் உள்ள லிப்ஸ் என்றழைக்கப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி. இந்த கருவி ஆப்டிக்ஸ் அமைப்புகளுக்கான ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அலுமினியம்,இருப்பு,கால்சியம், குரோமீயம், மாங்கனீஸ்,சிலிகான்,டைட்டானியம் உள்ளிட்ட 8 தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்துள்ள பிரக்யான் ஹைட்ரஜன் இருப்பதையும் தேடி வருகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்