உள்ளூர் செய்திகள்

ஆஸி.யில் இனவெறி அரைகுறை ஒப்புதல்

ஆனால் அரைகுறை மனதுடன் போலீஸ் உயர் அதிகாரிகள், எங்கள் நாட்டிலும் இனவெறிபிடித்த சிலர் இருக்கின்றனர் என்று ஒப்புக் கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கிட்டதட்ட ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பலர் பகுதி நேரமாக டாக்சிஓட்டுவது, ஓட்டல்களில் வேலை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி வேலை செய்யும் இளைஞர்கள் நடு இரவில் வீடு திரும்பும் போது வழிபறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த ஓராண்டாக இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. பாதுகாப்பு அதிகரிப்பப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு கூறினாலும், இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. கடந்த இரண்டு நாட்களில் டாக்சி ஓட்டிய மூன்று இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். விக்டோரியா மாநிலத்தின் பலார்டு பகுதியில் எம்.பி.ஏ.,படிக்கும் இந்திய மாணவர் பகுதி நேரத்தில் டாக்சி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பேர்ட்வுட் என்ற இடத்திற்கு வந்து தங்களை ஏற்றி செல்லும் படி தொலை பேசியில் அழைப்பு வந்தது. இதையடுத்து இந்திய மாணவர் அந்த பகுதிக்கு சென்று நான்கு பேரை தன்னுடைய டாக்சியில் ஏற்றிக்கொண்டார்.டாக்சி சென்று கொண்டிருக்கும் போது முன் இருக்கையில் இருந்தவர்கள் பிரேக்கையும், கியரையும் அழுத்தி கொண்டே இருந்தனர். அவர்களை சும்மா இருக்கும் படி கூறிய டிரைவரை பின்னால் இருந்த வாலிபர் ஒருவர் தலையில் அடித்து கொண்டே வந்தார். நிலைமை உணர்ந்த டிரைவர், ஹாரனை பலமாக அழுத்த துவங்கினர். சாலையில் உள்ளவர்கள் டாக்சியை திரும்பி பார்த்தனர். உடனே, டாக்சிக்குள் இருந்த மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். நான்காவது நபரிடம் காசு கேட்ட போது அவரும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்றார்.ஆஸ்திரேலிய போலீசார் இந்த சம்பவத்துக்கும் இனவெறிக்கும் சம்பந்தம் கிடையாது, என்று கூறவில்லை.விக்டோரியா போலீஸ் துணை கமிஷனர் கென்ஜோன்ஸ், சமுதாயத்தில் குறிப்பிட்ட மிகக்குறைந்த சிலர் இனவெறி எண்ணம் கொண்டவர்கள். இனவெறி பிடித்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர், அவர்களை அடையாளம் கண்டு விட்டோம் என்று அரைகுறை மனதுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்