உள்ளூர் செய்திகள்

வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 4 மையங்களில் நடந்த வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வை 1098 பேர் எழுதிய நிலையில் 210 பேர் ஆப்சென்ட் ஆகினர்.திண்டுக்கல்லில் வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு நேற்று திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒய்.எம்.ஆர்., பட்டி புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி, மதுரைரோடு அவர்லேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 4 மையங்களில் நடந்து. 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில் 1098 நபர்கள் தேர்வு எழுதி, 210 பேர் ஆப்சென்ட் ஆகினர். 66 கண்காணிப்பாளர்கள், 8 தலைமை அலுவலர்கள், ஒவ்வொரு மையத்திற்கும் தலா 2 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் என மொத்தம் 82 பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் பூங்கொடி மையங்களை ஆய்வு செய்தார். கல்வித்துறை இணை இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்