உள்ளூர் செய்திகள்

ஆளுநருடன் பா.ஜ., செயலாளர் சந்திப்பு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்புக்கு வந்த ஆளுநர் ரவியை மரியாதை நிமித்தமாக பா.ஜ., மாநில செயலாளர் சீனிவாசன் சந்தித்தார்.விருதுநகர் லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள சீனிவாசன், விருதுநகர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடியின் பங்களிப்பான எய்ம்ஸ் மருத்துவமனை, சாத்துார் ஜவுளி பூங்கா, வளர துடிக்கும் மாவட்டமாக விருதுநகரை தேர்ந்தெடுத்தது போன்றவை குறித்து ஆளுநரிடம் கலந்துரையாடினார்.அதுபோல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவின் சிகார் லைட்டருக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது, சிவகாசி பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு, விருதுநகர் மாவட்டத்தின் தொழில் பாதுகாப்பில் அமைச்சருக்கு இருக்கும் சிறப்பு அக்கறை குறித்து ஆளுநரிடம் பேசினார். மேலும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை குறித்தும் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்