உள்ளூர் செய்திகள்

வயல்வெளியில் வேளாண் பேராசிரியர் ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குபத்தில் வேளாண் இணை பேராசிரியர் ஆய்வு செய்தார்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ஜமுனா ஆசூர் தெற்கு பொன்னங்குப்பம் கிராமத்தில் நெல் நடவு வயல்வெளி மற்றும் நாற்றங்காலை ஆய்வு செய்தார்.அப்போது, நெல்லில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்ற பொட்டாஷ் கரைக்கும் பாக்டீரியா மதிப்பீடு குறித்து விளக்கம் அளித்து விவசாயிகளுக்கு பாக்டீரியா உரங்களை வழங்கினார். முன்னோடி விவசாயிகள் அப்பா சாமி, ரவிச்சந்திரன், ஆறுமுகம், சதாசிவம் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்