தண்டனையால் தடம் மாறும் மாணவர்கள்
இதனால் இளைய சமுதாயம், தவறான வழியில் செல்லும் நிலை ஏற்படுகிறது. திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2,000 மாணவர்கள் படிக்கின்றனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் சில நேரத்தில் தாமதமாக வருகின்றனர். தாமதமாக வருவோர், சரியாக படிக்காதவர், சேட்டை செய்வோர், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறுவோரை, பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வெளியேற்றுகின்றனர். பெற்றோரை அழைத்து வர சொல்லி, இம்மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இம்மாணவர்கள், விட்டது தொல்லை என கருதி வைகை ஆற்றுக்குள் சுற்றி திரிகின்றனர். வைகை மேம்பாலத்தின் கீழ் தூங்குவது, ஆற்றில் குளிப்பது என கும்மாளமாக பொழுதை கழித்து விட்டு, மாலையில் வீட்டுக்கு செல்கின்றனர். இதில் சில மாணவர்கள் புகை, போதை போன்ற தீய வழிகளிலும் ஈடுபடுகின்றனர். இவர்கள் சமூகவிரோதிகளுடன் கைகோர்க்கும் அபாயமும் உள்ளது. ஆனால், மகன் ஒழுக்கமாக பள்ளி சென்று படித்து வருகிறான் என பெற்றோர் நம்புகின்றனர். வெளியே சென்ற மாணவர்களை பற்றி, ஆசிரியர்களும் சிந்திப்பதில்லை. தற்போது அரசு பொது தேர்வு நெருங்கி வரும் நிலையில், இம்மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. எதிர்காலத்தை கருதி, மாணவர்களை வெளியேற்றுவதை, ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், மாணவர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும். இதன் மூல ம், இளைய சமுதாயம் தடம் மாறுவதை தடுக்கமுடியும். மகன்களின் நடத்தையை, பெற்றோரும் கண்காணிக்க வேண்டும்.