பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு
ஈரோடு: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது.காலையில் நடந்த காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சு போட்டியில் முதல், 3 இடங்களை கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வெ.பிரணிதா, வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கொ.ஸலீனா, கல்கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ப.சிவரஞ்சனி வென்றனர். இவர்களுக்கு முறையே, 5,000 ரூபாய், 3,000 ரூபாய், 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.சிறப்பு பரிசாக அரசு பள்ளிகளில் படித்த வீரப்பன்சத்திரம் மாரப்பகவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி த.சுதா, அ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மு.தேவபாலா ஆகியோருக்கு சிறப்பு பரிசாக தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.நேரு பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி மதியம் நடந்தது. இதில் வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ்கனி, ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி கோ.நிதின், திண்டல் பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இர்பான் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்து ரொக்கப்பரிசு வென்றனர்.சிறப்பு பரிசாக அரசு பள்ளிகளில் படித்த கல்கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ப.சிவரஞ்சனி, அந்தியூர் நெரிஞ்சிபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ச.ம.செளத்ரி ஆகியோருக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.