உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான போட்டிகள் இன்று துவக்கம்

தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஜிம்னாஸ்டிக், நீச்சல், பாக்ஸிங், சிலம்பம், ஜூடோ உள்ளிட்ட 11 வகையான போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று துவங்குகிறது.அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், மாணவிகளுக்கு 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று துவங்குகிறது. மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜிம்னாஸ்டிக், நீச்சல் போட்டி, ஸ்குவாஷ், டேக்வாண்டோ போட்டி நடக்கிறது.நவ., 24ல் வாள் சண்டை, நவ., 24, 25ல் பாக்ஸிங், நவ.,28 ல் சிலம்பம், சைக்கிள் போட்டி நடக்கிறது. நவ., 23ல் கம்பம் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளியில் வலைப்பந்து போட்டி, நவ., 27 ல் ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளியில் கேரம் போட்டி, நவ., 29ல் முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் பீச் வாலிபால், உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஜூடோ போட்டிகள் நடக்கிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிக்கு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்