ரத்தினம் கல்லுாரிக்கு நாஸ்காம் அங்கீகாரம்
கோவை: நேஷனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் அண்ட் சர்வீஸ் கம்பெனிகளால் (நாஸ்காம்) சார்பில், தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைகளில் புதுமை, சிறப்பு மற்றும் மாற்றத்தக்க பங்களிப்புகளுக்காக, நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.சென்னையில் நடந்த இந்த விழாவில், ரத்தினம் தொழில்நுட்பக் கல்லுாரி மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் எதிர்காலத் திறன் முதன்மைத் திட்டத்தின் கீழ் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு துறையில் மூன்று விரிவான படிப்புகளை வழங்கியதற்காக, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நிஜ உலக சவால்கள் மற்றும் தொழில்துறை வாய்ப்புகளுக்கேற்ப, பி.பி.எம்., மாணவர்களை தயார்படுத்திய நிறுவனத்தின், அர்ப்பணிப்பிற்காக அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாஸ்காமின் அங்கீகாரம், ரத்தினம் கல்லுாரியின் சிறப்பம்சங்கள், புத்தாக்கம் மற்றும் மாணவர்களை தொழில்துறைக்கு தயாரான நிபுணர்களாக மாற்றுவதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என, கல்லுாரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் தெரிவித்தார்.