பல்கலைகள் முறைகேடு விசாரணைக்கு உத்தரவு
இது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலான பல்கலைகளில், நிதி மேலாண்மை தொடர்பாக, தணிக்கை துறையின் ஆட்சேபனைகள், அரசுக்கு வந்துள்ளன. அவற்றுக்கான காரணம், அதன் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, உயர் கல்வித்துறை செயலர் தலைமையிலான கமிட்டி, விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.