இன்று தேசிய பாதுகாப்பு தினம்
தேசிய பாதுகாப்பு குழுமம் 1966 மார்ச் 4ல் உருவாக்கப்பட்டது. இதன் நினைவாக 1972 முதல், தொழிற்சாலை நிர்வாகங்கள், தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 4ல் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நிதி, வருவாய் இழப்பு, சுகாதார பிரச்னை உட்பட மக்கள் சந்திக்கும் பல பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. விபத்து, தொழில்சார் நோய்கள் தேசிய பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்துகிறது. அவை மரணம், உடல் குறைபாடு, பொருட்சேதம் என சமூக சூழலிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.