உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கல்வி பேஸ்புக் பக்கம் முடக்கம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையின் சமூக வலைதள பக்கத்தை முடக்கி, சினிமா, வீடியோக்களை மர்ம நபர்கள் பதிவேற்றம் செய்துஉள்ளனர்.பள்ளிக்கல்வித் துறையின் கீழ், சமூக வலைதளமான, பேஸ்புக்கில் கணக்கு துவங்கப்பட்டு, மாணவர்கள் திறன் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறைகள் பற்றிய, &'வீடியோ&'க்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்த பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி, அதில், சினிமா வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் குறித்து &'சைபர் கிரைம்&' போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்