உள்ளூர் செய்திகள்

பிரசாரத்தில் சிறுவர்கள் சட்டப்படி நடவடிக்கை

மைசூரு: அரசியல் கட்சிகள், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்கு சிறுவர்களை பயன்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திரா தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மைசூரு மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜேந்திரா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:தேர்தல் விதிமுறைகள் ஜூன் 6ம் தேதி வரை அமலில் இருக்கும். பொது மக்கள், 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம்; 10,000 ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. வியாபாரிகள் தகுந்த ரசீது ஆவணங்களுடன் பணத்தை கொண்டு செல்லலாம். இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும்.குடிநீர் பிரச்னையை வைத்து அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதோ, விவாதம் நடத்தவோ கூடாது. குடிநீர் பிரச்னை இருந்தால் கிராம மக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, பிரச்னையை தீர்க்கலாம். சிறுவர்கள், குழந்தைகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.மைசூரு நகர எல்லைகளின் அனைத்து சாலைகளிலும், சோதனைச் சாவடிகள் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்